கிரிஷ் கௌடா -- பயிற்சியின் வாசகம் என்னை ஈர்த்தது.
தனது கெட்டப்பழக்கத்தை விட வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. அதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்விதான்; அதற்குக் காரணம் அவனது மனம் தான். ஒரு இருபது நொடிகள் புகைப்பிடிக்காமல் இருந்தால் மனதின் பரிதவிப்பு அதிகரித்தது. புகையின் ஒரு இழுப்புக்கு மனம் ஏங்கியது. அது உச்சத்தை அடைந்தது. அதனால் உண்டாகும் அவஸ்தைகளும் அதிகரித்தது. அந்த நிலையில்தான் கிரீஷ் வாழும் கலையின் பயிற்சியில் சேர்ந்து அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.
"இந்த பயிற்சியில், புகைக்காத போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக் கொண்டேன். அந்த ரகசியம் கற்கவேண்டிய ஒன்று" என்று 33 வயதான கிரீஷ் என்ற பெங்களூரில் பொறியியல் படிக்கும் மாணவன் கூறினார். புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து விடுபடவே எண்ணுகின்றனர். அந்த நாளுக்காக காத்திருக்கின்றனர்.
தான் அதிலிருந்து விடுபட்ட கதையைக் கூறும் போது கிரீஷ் , "8 வருடங் களுக்கு முன் எனது 16 வது வயதில் ஆரம்பித்து 2வருடங்களில் தொடர்புகைத்தலுக்கு ஆளாகி, மூன்றாவது வருடம் நாள் ஒன்றுக்கு 30 சிகரெட் என்றானது.
புகைபிடித்த பின் நுரையீரலில் சக்தி மிகவும் குறைந்தது போல் உணர்ந்தேன். மனம் உடல் ஆகியவற்றில் திண்மை குறைந்ததுபோல் இருந்தது. என் பலம் குறைந்தது.புகைபிடித்தல் ஒரு வழக்கம் என்பதைத் தாண்டி அது ஏற்படுத்தும் பரிதவிப்பு என்று நிறைய விஷயங்கள் அதில் அடங்கியுள்ளது. அது என் உணர்ச்சியுடன் இணைந்தது.
விடுபட நிறைய வழிகள் இருந்தாலும் கிரிஷுக்கு எதுவும் உதவவில்லை. " முதலில் ரெய்கி வழியில் முயற்சி செய்தேன், அக்குபஞ்சர் , நிகோடின், மெல்லுதல் என்றெல்லாம் முயற்சித்துப் பார்த்தேன். இறுதியில் வாழும் கலையின் 'டி அடிக்ஷன் ' என்ற பிரத்யேக பயிற்சியைப்பற்றி கேள்விப்பட்டேன். அதன் வாசகமே என்னை கவர்ந்தது. 'தற்போது விடுபடுதல் என்பது ஒரு இழுப்பு தூரமே என்று இருந்தது" அந்த பயிற்சி அமோகமாக இருந்தது. அனேகர் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டனர்.
அந்த இரண்டு நாட்கள்.
மூன்று மாதங்கள் கழித்து தான் மேலும் குறைத்துக்கொண்டதாக கிரிஷ் கூறினார். “புகைபிடிப்பதை முற்றிலுமாக கைவிட நினைத்தேன். எனவே DSN என்ற பயிற்சியில் சேர்ந்தேன். அந்த அற்புதமான பயிற்சியில் இரண்டரை நாட்கள் சுத்தமாக புகை பிடிக்காதது என் வாழ்க்கையில் அதுவே முதல் முறை. இது மிகப்பெரிய விஷயம் . நான் அசந்து விட்டேன்" என்று கூறினார்.
DSN க்குப் பிறகு பத்துநாட்கள் புகைபிடிக்கவில்லை. அதுவே கடைசி முறை. வாழும் கலையையே கடைபிடித்தேன். எல்லா வழிகளும் நன்றாக வேலை செய்தது. சுதர்சனக் கிரியாவை விடாமல் செய்துவந்தேன். சில நாட்களிலேயே அந்த பரிதவிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டேன். இந்த மாற்றம் படிப்படியாகத்தான் ஏற்பட்டது. ஆனால் அது உறுதியான மாற்றம். அந்த வழக்கத்தை விடும் போது ஏற்படும் பரிதவிப்புகளைத்தாண்டி வர சுதர்சனக் கிரியா மிகவும் உதவியது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.. இன்று நான் புகை பிடிப்பதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. நான் உண்மையிலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று கூறினார்
“வாழும் கலை பயிற்சியை செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது. சுதர்சனக் கிரியா தொடந்து செய்ததால் இந்த மாற்றம் ஐந்து மாதங்களில் படிப்படியாக நடந்தது. புகைத்தலை விடும் பொழுது ஏற்படும் அவஸ்தைகளையும் பரிதவிப்புகளையும் கையாளவும் இங்கு கற்றுத் தந்த வழிமுறைகள் மிகவும் பயன் பட்டது. அதுவே இந்த பயிற்சியின் மேன்மை" என்று மேலும் கூறினார். என் படிப்பு, உறவுமுறை எல்லாமே மேம்பட்டது. சில நாட்களிலேயே பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. இதற்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுள்ளேன். என் போன்றவர்கள் இந்த பழக்கத்தை குறைக்கலாமே ஒழிய விடமுடியாது என்பது மற்றவர்கள் எண்ணம். ஆனால் பிராணாயாமம், சுதர்சனக் கிரியா ஆகியவை செய்த அற்புதம் யாராலும் புரிந்துக்கொள்ள இயலாது." என்று கூறி சிரிக்கிறார்.
இந்த கட்டுரையை எழுதியவர் மோனிகா படேல்.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தாலோ அல்லது வாழும் கலை பயிற்சியைப் பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தாலோ webteam.india@artofliving.org என்ற இணையதளத்திற்கு எழுதவும்; அல்லது உங்கள் கருத்துக்களையும் அதில் பதிவு செய்யலாம்.