ஆயுர்வேதத்தின் படி தூங்கி எழுவதன் பெருமை

ஆயுர்வேதத்தின் படி தூங்கி எழுவதன் பெருமை

 

 

 

சமஸ்க்ருதத்தில் அன்றாட ஒழுங்கு தினாச்சாரியா  என்றழைக்கப் படுகிறது. தின் என்றால் தினமும் ஆச்சரிய என்றால் பின்பற்றுவது அல்லது நெருக்கமான என்று பொருள். தினாச்சாரியா என்பது இயல்பான தினசரி அட்டவணையில் இயற்கையின் சுழற்சியை கணக்கில் எடுத்துக்கொள்வது. ஆயுர்வேதத்தில் ஒரு நாளின்  தொனியை அமைப்பதில் கருவியாக இருப்பதால், நாளின் ஆரம்ப நேரங்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப் படுகிறது.

 

ஆயுர்வேதம் அத்தகைய தினசரி அட்டவணை உடலுக்கும், மனதிற்கும்  ஒரு ஒழுங்கமைப்பை எடுத்து வந்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலிலுள்ள கழிவுகளை அகற்றித் தூய்மைப் படுத்துகிறது. எளிய ஆரோக்கியமான தினசரி அட்டவணை மூலம் ஒருவர் தனது தோஷங்களை சமப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரித்து, ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடனும்  புதுமலர்ச்சியுடனும் துவங்க முடியும்.

 

எளிய தினசரி அட்டவணையை காலை வேளையிலேயே பின்பற்றுவது அந்த நாளை பேரின்பத்துடன்  துவங்க வைக்கும். அத்தகைய புத்துணர்வான காலை நேரத்திற்கான சில வழிகாட்டுதல் குறிப்புக்கள் இங்கே  அளிக்கப்  பட்டிருக்கின்றன.

 

1. பிரம்ம முஹூர்த்தம் :

நீங்கள் சூரியன் தாளத்துடன் ஒத்திசைக்கும் பொருட்டு  சூரியன் உதிப்பதற்கு  ஒன்றரை மணி நேரம் முன்னால் எழுந்திருக்க வேண்டும். ஆயுர்வேதம் ஒரு நல்ல நேரம் என்று பரிந்துரைக்கும் . பிரம்ம முஹூர்த்தம் என்பது  'பிரம்மாவின் நேரம் ... தூய மெய்யுணர்வின் நேரம் - இதுவே அதி காலையில் எழுந்திருக்க வேண்டும் என்பதன் பொருள்.

சூரிய ஒளி தோன்றுவதற்கு சுமார் ஒன்றரை மணி  நேரத்திற்கு முன்னர் வெற்றிடத்தை ஓர் மாபெரும்  ஆற்றல்  நிரப்பும் .  பின்னர், சூரிய ஒளி தோன்றுவதற்கு  சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு, வளிமண்டலத்தில் இரண்டாவது உயர்ந்த ஆற்றல் தோன்றுகிறது. நம்பிக்கை, உத்வேகம் மற்றும் சமாதானம் ஆகியவை  வெளிப்படும் நேரம் இது. இந்த நேரத்தில் பிரம்ம ஞானம்   (தியானம் மற்றும் சுய பகுப்பாய்வு), சிறந்த அறிவு மற்றும் நித்திய மகிழ்ச்சி அடைவதற்கு சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், சூழல் தூய்மையாகவும், சாந்தமாகவும், இருப்பதால் தூங்கி எழுந்த மனதிற்கு இதமானதாக அமைகிறது.

 

இந்த நேரத்தில் தியானம் செய்வது மனதின்  செயல்திறனை அதிகரிக்க வைக்கிறது. சத்வ குணத்தையும் அதிகரிக்க உதவுகிறது.  ரஜஸ் ஏமாற்றும் தமோ குணங்களால் தோன்றும் மன அழுத்தம் அல்லது அதிகச் செயல்பாடு, மற்றும் சோம்பல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

 

2. சுவாசத்தின் சக்தி:

 எந்த நாசித்துவாரத்திலிருந்து  உங்கள் மூச்சு அதிக  வலுவாக பாய்க்கிறது என்று கவனியுங்கள். ஆயுர்வேத கூற்றுப்படி, வலது நாசித்துவாராம் சூரியனுக்குரியது- பித்தம் ; மற்றும் இடது நாசிக் துவாரம் சந்திரனுக்குரியது- கபம்.   மூளையின் வலது பக்கம்  படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறது, அதே சமயம் இடது புறம் தர்க்கரீதியான வாய்மொழி செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. ஆய்வுகளின் படி,  இடது நாசித்துவாரத்தின் வழியாக சுவாசிக்கும்போது, மூளையின் வலது பக்கம்  மேலாதிக்கம் செலுத்துகிறது. அதேபோன்று வலது நாசித்துவாரத்தின் வழியாக சுவாசிக்கும்போது, மூளையின் இடது  பக்கம்  மேலாதிக்கம் செலுத்துகிறது.

 

3. நேர்மறை அதிர்வலைகள்:

பண்டைய பாரம்பரியத்தின் படி, உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகளைக் கவனியுங்கள். செல்வம், அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் தேவியர்களை நினைவில் கொள்ளுங்கள். கைவிரல் நுனிகளை உங்கள் கட்டை விரலால் வட்டச் சுழற்சியாக மெதுவாக இதமாக வலதிலிருந்து இடது புறமாக, பின்னர் இடதிலிருந்து வலது புறமாகத் தடவி விடுங்கள். கைவிரல் நுனிகளை பயன்படுத்தி உங்கள் உள்ளங்கைகளைத் தேய்த்து விடுங்கள். இந்தப் பகுதியில் சுவாசம் அதிகரித்திருக்கிறதோ அந்த உள்ளங் கையை முத்தமிடுங்கள்.பின்னர் அடுத்த கையை முத்தமிடுங்கள். (இவ்வாறு முத்தமிடுதல் ஆற்றலை அளிக்கிறது.  சுய வெளிப்பாட்டிற்கான மிகச்  சிறந்த கருவிக்கு உங்கள் சிறந்த அதிர்வுகளை வழங்குகிறீர்கள்).பின்னர் இரு கைகளையும் சேர்த்துத் தேய்த்து விடுங்கள். உள்ளங்கைகளால்   மெதுவாக உங்கள் முகம், தலைப் பகுதி,தோள்கள், கைகள், கால்கள் ஆகியவற்றை தடவுங்கள். அதன் மூலம்  ஆற்றல் கவசத்தை உருவாக்குகிறீர்கள்; அது நாள் முழுவதும் எதிர்மறை பாதிப்பை அகற்றும்.

 

4. பாதுகாப்பு மந்திரம்

இந்தப் பாதுகாப்பு மந்திரத்தை அதி காலை வேளையில் உச்சாடனம் செய்து காளையான மனதுடன் மௌனமாக   சிறிது நேரம் அமர்ந்திருங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மி (   முன்கையில் அதாவது கைவிரல்களின் நுனியில் செல்வதிர்க்கதிபதியான லக்ஷ்மி அமர்ந்திருக்கிறாள்.)

கரமத்யே சரஸ்வதி (கைகளின் நடுப்பகுதியில் அதாவது உள்ளங்கையில் கல்விக் கடவுளாகிய சரஸ்வதி இருக்கிறாள்)

கரமூலே து கோவிந்தா

கைகளின் கடைசிப் பகுதியில் அதாவது மணிக்கட்டுகள் கோவிந்தன்- ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறார்)

பிரபத்தே கர தரிசனம் (அதிகாலை வேளையில்  கைகளை பார்ப்பது மங்களகர மானது )

5. நேர்மறையான அடுத்த படி

படுக்கையிலிருந்து எழும்போது, எந்த நாசித்  துவாரத்தில் அதிக மூச்சு எழுகிறது அந்த பக்கக் காலை தரையில் முதலில் வையுங்கள்.

6. சுத்தம் செய்தல்:

குளிர்ந்த நீரால் கைகள், முகம், வாய், கண்கள் மூக்கு, பற்கள் மற்றும் நாக்கு ஆகியவற்றை கழுவிச் சுத்தம் செய்யுங்கள். நீர் மின்விசைக் கடத்தியாகையால் மென்மையான திசுக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

7. தியானம் மற்றும் உடற்பயிற்சி

இளைப்பாருங்கள். இரு நாசித்துவாரங்கள் வழியாகவும் சுவாசம் ஒரே விதமாகச் செல்லும் வரையில் பிராணாயாமம் செய்யுங்கள். உங்கள் ஆற்றலை இதயச் சக்கிரம் மற்றும் ஆக்ஞயா  சக்கிரத்தில்(இரு புருவங்களுக்கிடையே )வைத்துத் தியானம் செய்யுங்கள். அதிகாலை நேரக் காற்றில் மெதுவாக நடந்து செல்லுங்கள். உங்களை சுற்றியுள்ள எளிய இனிமையான காட்சிகளை குறிப்பாக வெண்மையான நுண்ணிய நிறங்களில் உள்ள வாசனையான மலர்களைக்  காணுங்கள்.

 

வ்யாயமா அல்லது உடற் பயிற்சி சாதாரணமாக சூரிய நமஸ்காரம் போன்ற சில யோகாசனங்கள், நாடி சோதன் பிராணாயாமம் போன்ற சில சுவாசப் பயிற்சிகள் அடங்கியவையாக இருக்கும். ஆனால் நடைப் பயிற்சி நீச்சல் போன்றவையாகவும் இருக்கலாம். அதிகாலை வேலை உடற்பயிற்சி உடலில் மற்றும் மனதில் தேக்க நிலையை அகற்றி, ஜீரண அக்கினியை வலுப்படுத்தி கொழுப்பை குறைத்து, உடலில் நல்ல பிராண சக்தியைக் கூட்டி பொதுவாக மெல்லிய உணர்வையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. தீவிரமான உடற்பயிற்சியை விட உங்கள் திறனில் கால் அல்லது அரைப் பகுதியை அளித்து உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப் படுகிறது.

 

8. உங்களுக்கு நீங்கள் சலுகை காட்டிக் கொள்ளுங்கள்

உங்கள் உடலுக்கு நல்லெண்ணெய் மசாஜ் அளியுங்கள்.  2-3 நிமிடங்கள் உச்சந் தலை, நெற்றி, நெற்றிப் பொட்டுக்கள்,கைகள் மற்றும் , கால்களை மசாஜ் செய்ய வேண்டும்.

 

9. சரியாகக் குளியுங்கள் :

அதிகச் சூடும் அதிகக் குளிரும் இல்லாத நீரில் குளியுங்கள்.

 

10. மதிய வேளை:

மதிய உணவு  ஜீரணத்திற்கு மிக உகந்த நேரமான பகல் மணி 12  லிருந்து 1  மணிக்குள் எடுத்துக் கொள்ளப் படவேண்டும். ஆயுர்வேதத்தின் படி பகல் உணவு அதிகக் கனமான உணவாக இருத்தல் வேண்டும்.பகலுணவிற்குப் பிறகு உணவு ஜீரணிக்க சற்று நடக்கலாம். மிக்க குறைந்த நேரக் கண்ணயறல் தவிர நீண்ட நேர பகல் தூக்கம்  ஆயுர்வேதத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.

 

11. அந்தி நேரம்

இது பகலையும் இரவையும் இணைக்கும் ஒரு சிறப்பான நேரம். இது மாலை நேர பிரார்த்தனை மற்றும் தியானங்கள் செய்யும் நேரமாகும்.

 

12. இரவுணவு:

இரவுணவு சுமார் 6  மணியிலிருந்து 7 மணிக்குள் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். பகலுணவை விட குறைந்த கனமுள்ளதாக இருக்க வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்த பட்சம் மூன்று  மணி நேரத்திற்கு முன்னதாக இரவுணவு எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். அப்போது ஜீரணத்திற்குத் தேவையான நேரம் கிடைக்கும். இரவுணவு எடுத்துக் கொண்டவுடனேயே கனத்த வயிற்றுடன் உறங்கச் செல்வது தவிர்க்கப் பட வேண்டும். உணவு ஜீரணிக்க 10 -15 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

 

13. உறங்கச் செல்லும் நேரம்

தூங்குவதற்கு சிறந்த நேரம் 10.30 மணி. உடலமைப்பை சாந்தப் படுத்த பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்கலாம்.

 

இதை எழுதிய டாக்டர் நிஷா மணிகண்டன் வாழும் கலையின் மூத்த ஆசிரியர். அவர் பஞ்சகர்மா சிகிச்சை முறைகளுக்கு சர்வ தேச ஆசிரியரும் ஆவார். இந்தக் கட்டுரை உங்களுக்குத் பிடித்திருந்தால் எங்களுக்கு webteam.india@artofliving.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். அல்லது கீழே உங்கள் கருத்துக் களை பதிவிடுங்கள்.