இளைஞருக்கு அதிகாரத்தை அளித்தல் & திறனை மேம்படுத்துதல் ( யெஸ்!+) (Yes Plus Programs in tamil)

 

யெஸ்!+ பயிற்சி உலகெங்கும் உள்ள பல்வேறு முதன்மையான நிறுவனங்களில் கற்று தரப்படுகிறது.

நல்லதொரு வேலை, அதே சமயத்தில் சொந்த வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இரண்டையும் நான் பெறமுடியுமா?

முக்கியமாக மாணவ மாணவிகளுக்கும், வேலைக்குப் போகும் இளைஞர்களுக்கும், அவர்களிடமுள்ள சிறந்த முழுமையான திறனை முடுக்கி வெளிப்படுத்தும் வகையில் சக்தி பொருந்திய நிகழ்வாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இது பண்டைய ஞானத்தையும், யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் மற்றும் சுதர்சனக்ரியா ஆகியவை கலந்த ஓர் அறிவார்ந்த மாற்றம். யெஸ்+ பயிற்சி வாழ்க்கையில் தேவையான உற்சாகமான மாற்றத்தை அளிக்கும் வகையில் சக்தியை அதிகரிக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களில் யெஸ்+ பயிற்சி நடத்தப்படுகிறது.

சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் போராட்டமாக இல்லாமல் சுமுகமாக ஒத்துப்போக எளிதான கணக்கீடு.

1. கூர்மையான கவனிப்பு = ஒரு நாளின் பலமணிநேரங்களில்

படிப்பதிலோ வேலைசெய்வதிலோ கவனம் வைக்கும் போது ஒருவித பதட்டமும் இருக்கும்போது (தினமும் இந்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும் என்னும் காலவரையறை) 50% திறன் குறைந்து விடுகிறது. நேரம்  பணம் இவை இரண்டையும் மனம் அமைதியாகவும் கவனம் நிறைந்ததாகவும் இருக்கும் போதே நீங்கள் பெற முடியும்.

யெஸ்!+ பயிற்சி அங்கே செல்ல எளிமையான பாதையாகும்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்க அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கத் திரையிலேயே இரண்டரை மணிநேரங்கள் ஒட்டிக்கொள்கிறீர்கள். இதே கவனத்தை உங்களின் படிப்பிலும் வேலையிலும் எப்படி வைப்பது?

2. சக்தியை அதிகரித்தல் = தடுமாற்றமில்லாத தன்னம்பிக்கை

நம்முடைய திறன்களில் நமக்கு ஐயம் ஏற்பட்டால், சுய மரியாதையில் குறைபாடும் மேடை பயமும் ஏற்படும். நான் என்னை நம்புகிறேன் (நம்பிக்கை) அல்லது நான் இதைச் செய்ய தயாராகவில்லை (ஐயம்). சந்தேகம் என்பது சக்தி குறைபாட்டின் குறியீடு. திறமை சக்தியின் உயரத்தை அதிகரிக்கும்.

யெஸ் ப்ளஸில் கற்றுத்தரப்படும் சக்திவாய்ந்த மூச்சுப் பயிற்சிகள், பயனற்ற சந்தேகங்களை அழித்து, உங்களுக்குள் உயர் சக்தியை உட்புகுத்தி தடுமாற்ற தன்னம்பிக்கையை அளிக்கும்.

3. எளிதாக முடிவெடுக்கமுடியும் – தெளிவாகவும்

எளிதாகச் சொல்லிவிடலாம், “கோபப்படாதே. பொறாமை கொள்ளாதே என்றெல்லாம்… ஆனால் எப்படி?
இந்தநிலையின் உச்சத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டுமென்றால், நாம் எப்படி சரியான முடிவை எடுக்க முடியும்? உணர்வின் அழுத்தத்தை மனதிலிருந்து வெளியேற்றி ஒழுங்குபடுத்த தினமும் சுதர்சனக்ரியா செய்ய வேண்டும். இந்த விதமாக அனைத்தையும் அதன் இயல்பான நிலையில் பார்த்து சரியான முடிவுகளை எடுக்க முடியும்.