இரத்த அழுத்தத்திற்கான யோகப் பயிற்சி
முறையாக யோகப்பயிற்சி செய்வதன் மூலம் வியாதிகளால் உடல் பாதிக்கப் படுவது குறைவதோடு, தினசரி மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது. மொத்தத்தில் நல் ஆரோக்கியம் மிகுந்தவர்களாக உணர்கிறோம்.
அனைவரும் யோகாவினால் பயனடைவது உறுதி. அவர்கள் தவறாமல் சரியான பயிற்சியில் ஈடுபட வேண்டும். தினசரி யோகப் பயிற்சியைத் தவறாது செய்வதால் கீழ்க் கண்ட நலன்களைப் பெறுகிறோம்.
- ஜீரணசக்தி, இரத்த ஓட்டம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது
- யோகா, நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் ஆகியவற்றின் செயல் பாட்டினை வலுப்படுத்துகிறது.
- கீழ்க் கண்ட நோய்கள் வராமலும் ,அத்தகைய நோய்கள் நாட்பட்டு , நீடித்து இருப்பின் அவற்றினின்று விடுதலை பெறவும் துணை புரிகிறது.
அந்நோய்கள் வருமாறு:
- உயர் இரத்த அழுத்தம்
- உடலின் பல உறுப்புகளில் வலியின் நீடித்த அறிகுறிகள்
- பதட்டம், காரணமின்றி அதிகமான பயம் மற்றும் குழப்பம்.
- மன அழுத்தம்
- தூக்கம் சம்பந்தமான பிரச்னைகள்
- நீடித்த சோர்வு
ஸ்ரீ ஸ்ரீ யோகா , யோகாசனாவின் ஒவ்வொரு நிலையினையும் முதலிலிருந்து, கடைசி வரை கவனம் செலுத்துவதோடு, சுவாசத்தினையும் கவனித்துச் செயல்படுகிறது.
கீழ்க்கண்ட ஆசனங்களும், பிராணாயாமாவும் இரத்த அழுத்தத்தினை குறைக்கத் துணைபுரிகிறது. சரியான பயிற்சியாளரின் பார்வையின் கீழ் கற்கப்பட்டு, பின்னரே பயிற்சி செய்தல் வேண்டும்.
- சுகாசனம்
- முழுமையான யோகாவிற்கான சுவாசப்பயிற்சி
- பிரம்மரி
- ஜானு சிரசாசன்
- பஸ்ச்சிமோத்தானாசனம்
- பூர்வாதானுசனம்
- சவாசனம்
- அர்த்த ஹலாசனம்
- சேது பந்தனாசனம்
- மாறுபட்ட பவனமுக்தாசனா [ தலையினைத் தூக்காது, முட்டியினைச் சுழலச் செய்யும் அசைவு ]
- வயிற்றின் மீது குப்புறப் படுத்தல்
- பிரம்மரியுடன் மகராசனம்
- குழந்தை நிலை
- வஜ்ராசனம்
- சப்த் வஜ்ராசனம்
- கால்களை நீட்டி சவாசனத்திற்கு வரவும்.
- யோக நித்திரை
இரத்த அழுத்தத்திற்கான சில ஆசனங்களின் விளக்கம் :
பிரேத நிலையில் ஓய்வு பெறுதல் [ சவாசனம்]
- பயிற்சியின் முடிவில் ஓய்வு நிலையில் வெதுவெதுப்பாக இருக்க, ஸ்வெட்டர், காலுறை,மற்றும் போர்வை ஆகியவற்றை வைத்துக் கொள்ள விரும்பலாம்
- மல்லாந்து நேராக முதுகின் மேல் படுக்கவும்.
- ஒரு முறை சுவாசித்து, [ உள் மூச்சு எடுத்து ] தலையிலிருந்து கால் வரை முழு உடம்பினையும் இருக்கவும். மூச்சினைப் பிடித்தவாறு, கைகளை முஷ்டி செய்து,முகத்தின் தசைகளை இறுக்கி, தொடர்ந்து, உடம்பின் ஒவ்வொரு தசை யினையும் இறுக்கவும்.
- வாய் வழியே சுவாசத்தை 'ஹா' என்ற சத்தத்துடன் வெளிவிட்டவாறு, தசைகளை இளக்கவும்.
- மற்றும் ஒரு முறை இதனையே செய்யவும்.
- கண்களை மூடியவாறு சௌகரியமான நிலையில் படுக்கவும்.
- மனோரீதியாக உடலின் எல்லா உறுப்புகளையும் ஓய்வு பெறச் செய்யவும். விழிப்புணர்வினைப் பாதங்களில் துவங்கி, தலை முடிய, ஒவ்வொரு உறுப்பிற்கும் நன்றியுணர்வோடு எடுத்துச் செல்லவும். உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் ஓய்வு பெறுவதை நன்றியுணர்வே மேம்படச் செய்யவல்லது.
- பூமி தேவி உங்களுடைய முழு எடையினையும் சுமப்பதாக நினைப்பதன் மூலம் உடல் இலேசாக இருப்பதை உணரவும். ஓய்வாக இருக்கையில் உடலினை இலேசாக உணரலாம்.
- அடுத்து, விழிப்புணர்வுடன், சுவாசத்தினை மென்மையாக்கி, நீளத்தினைக் குறைத்து, அமைதி பெறச் செய்யவும்.
- மனதிலுள்ள வருத்தங்கள், பயம், பதட்டம், கிளர்ச்சி ஆகியவற்றினை விட்டு விலகி, மனதினை ஓய்வு பெறச் செய்யவும். யாவற்றினையும் இறைவன் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.அப்போதைக்கு பழைய நிகழ்வுகளையும், எதிர்கால திட்டங்களையும் விட்டு சற்றே விலகவும்.
- உங்களுக்குள் இருக்கும் அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வெளியில்
ஓய்வு எடுக்கவும்.
- சில நிமிட ஓய்வுக்குப் பின், விழிப்புணர்வினை உடலின் மேல் கொண்டு வரவும். இரண்டொரு ஆழமான சுவாசம் எடுக்கவும்.
- மெதுவாக வலது பக்கம் திரும்பவும்.
- நிதானமாக எழுந்து உட்காரவும்.
- மூன்று முறை ஓம் ஜெபிக்கவும்.
குழந்தை நிலை [ சிசு ஆசனா ]
- குதி கால்களின் மேல் அமரவும். இடுப்புப் பகுதியினை குதி கால் களின் மேல் இருக்குமாறு, முன் நோக்கிக் குனிந்து, முன் நெற்றியினைத் தரையின் மேல் படுமாறு செய்யவும்.
- உள்ளங்கைகள் மேல்நோக்கியவாறு,கைகளைப் பக்கவாட்டில் தரையில் வைத்துக் கொள்ளவும்.[ இவ்வாறு செய்ய முடியவில்லை யெனில் ஒரு கை முஷ்டி மீது இன்னொன்றினை வைத்து, அதன் மேல் முன் நெற்றியினை வைத்துக் கொள்ளவும்.
- மென்மையாக மார்பினை தொடைகளின் மேல் அழுத்தவும்.
- அப்படியே இருக்கவும்.
- நிதானமாக, ஒவ்வொரு முதுகெலும்பினையும் பழைய நிலைக்கு வரும் வகையில், குதி கால்களின் மேல் அமர்ந்து,ஒய்வு எடுக்கவும்.
நன்மைகள்:
- உடல் ஆழ்ந்த ஓய்வு நிலைக்குச் செல்கிறது.
- மலச் சிக்கல் சீர் பெறுகிறது.
- நரம்பு மண்டலத்தினை அமைதி பெறச் செய்கிறது.