ஷில அப்யங்கா - சூடான கல் மசாஜ் சிகிச்சை

ஷில அப்யங்கா -  சூடான கல் மசாஜ் சிகிச்சை

 

Description: hila Abhyanga – Hot Stone Massage Therapy

 

ஆயுர்வேதத்தின்  பண்டையப்  புதையல் பேழையில்  உலகம் முழுவதும் பிரபல மடைந்து வரும் ஒரு வகையான மசாஜ் சிகிச்சை முறை உள்ளது.  பண்டைய ஆயுர்வேத நுட்பமான , ஷில அப்யங்கா  (சூடான கல் மசாஜ்) என்பது   ஆயுர்வேத மூலிகை எண்ணெய்களையும், தண்ணீரில் சூடுபடுத்தப்பட்ட ஒரு வகையான கருங்கற்களையும்   பயன்படுத்தி  மெதுவான, ஆழமான வகையில் திசுக்களுக்கு  மசாஜ் வழங்குகிறது.

சூடான கல் மசாஜ் (ஷில அப்யங்கா) என்பது என்ன?

இந்த மசாஜ் பாரம்பரியமாக இரத்த ஓட்ட அமைப்பைத் தூண்டுவதற்கு  அளிக்கப் படுகிறது. தசைகளை மென்மையாக்க மற்றும் ஓய்வெடுக்க, நச்சுக்களை வெளியேற்ற   தசை பிடிப்பு மற்றும் வலிகளைக்  குறைக்க, மற்றும் ஆழ்ந்த தளர்வு நிலையைத் தூண்டி விட அளிக்கப் படுகிறது.

 

முதலில் உடலில் எண்ணெய் தடவப் படுகிறது. அது  அழுத்தம் , உடல் மற்றும் ஆற்றல்  புள்ளிகளை திறக்க உதவுகிறது. அடுத்த கட்டத்தில், உடலில் முக்கிய புள்ளிகளுக்கு மேல் (மர்மங்கள்) மேல் ஒரு வகை கருங்கல், அல்லது ஷில (குறிப்பிட்ட சிகிச்சை குணங்கள் கொண்ட பன்மால் என்றழைக்கப் படும் வட்ட வடிவ கற்கள்  ) பயன்படுத்தப்பட வேண்டும்.  அறையில்-வெப்ப நிலை படிகங் களை பயன்படுத்தி, உடலின் சக்ரா அமைப்புடன் ஒத்திசைவதற்கு ஒரு துல்லியமான வரிசையில் உடலில் அவற்றை சிகிச்சையாளர் வைக்கிறார். கூர்மையான களிமண் கற்கள்   கருவிகளாக பயன்படுத்தப்படுகையில் கற்கள் உறுதியாக எண்ணெய் தடவப் பட்ட தசைகள் மீது பளபளக்கின்றன.

ஏன் சூடான கற்களை பயன்படுத்த வேண்டும்?

ஷில அப்யங்கா   அல்லது சூடான கல் மசாஜ் பல நன்மைகளைத் தருகின்றது.

  1. கற்கள் வெப்பத்தின் ரேடியேட்டர்களாக செயல்படுகின்றன, உயர், நடுத்தர மற்றும் குறைந்த வெப்ப ஒளியைப் பொறுத்து அவை மதிப்பிடப் படுகின்றன.
  2. கல்  சிகிச்சை உடல் மற்றும் மன அமைப்பில்  ஒரு இளைப்பாறுதலைத் தரு கிறது. ஆழமான திசு வெளியீடு மற்றும் சீரமைப்பு ஆகியவற்றையும் தருகிறது.
  3. கற்களின் வெப்பம் பதட்டத்தை மென்மையாக மாற்றி, அழுத்தம் மற்றும் கவலையை கரைக்கிறது.
  4. அப்யங்காவிற்கு  உட்பட்ட நபர் அதனை நன்கு ஏற்றுக் கொண்டால்,  அவர் உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மேம்பட்ட மாற்றத்தை அனுபவிக் கலாம்.
  5. கற்கள் மற்றும் படிகங்கள் உடற்கூறுகளை மாற்றியமைக்கின்றன மற்றும் நமது உடலில் சமநிலையின்மையை நீக்குகிறது.
  6. பெரும்பாலான தாதுக்கள் ஒரு காந்த குணத்தைக்  கொண்டிருப்பதால், கற்கள் காந்தங்களைப் போல செயல்படுகின்றன. அப்யங்கா கற்கள், அடக்கப் பட்ட உணர்ச்சிகள்  , மன அழுத்தம், துக்கம் மற்றும் உடல் வலி, ஆகியவற்றை வெளியேற்றி விடுகிறது.நீண்ட நேரம் சூடும் இருக்கும்.
  7. கருப்பான  கற்கள் அதிக  இரும்பு மற்றும் மிக உயர்ந்த காந்த அடர்த்தி கொண்டவை.

 

சிகிச்சையாளரும் முக்கியம்

கல் சிகிச்சையாளர் சரியான உத்திகள் மற்றும் சரியான கற்களைப் பயன் படுத்துவது மிகவும் அவசியம். மசாஜுடன் கூட, அமைதி மற்றும் ஒரு ஆற்றுப்படுத்தும் நோக்கம் ஆகியவற்றை அடைவது சிகிச்சை பெறுபவருக்கு  முக்கியம்.

சூடான கல் மசாஜ் - வேகம் நிறைந்த  வாழ்க்கையில் அவசியமானது.

இன்றைய நகர்ப்புற, தொழில்நுட்ப உந்துதல் உள்ள சமுதாய அமைப்பு மக்களை அதிக அளவில் ஆற்றலை செலவிட வைக்கிறது.  இயற்கையின் குணப்படுத்தும் தாளங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகின்றனர்.  காஃபின் அல்லது காரமான உணவு, குழப்பமான, உயர்ந்த அளவு ஆற்றலைச் செலவிட்டு அழுத்தம் நிறைந்த வாழ்க்கை -இதுவே இன்றைய மக்களின் நிலை.

 

மக்கள் அமைதியினைத் தேடுகிறார்கள், ஆனால் பிராண சக்தியை   மேம்படுத்து வதன் மூலம், மனதை கவனித்துக்கொள்வதன் மூலம், அந்த அமைதி   உள்ளிருந்து மட்டுமே வர முடியும். ஷில அப்யங்காவிலுள்ள  சூடான கற்களின் வெப்பம், படபடக்கும் மனதை அமைதிப் படுத்தி, வாத தோஷத்தை அகற்றி, அமைதியான நிலையை தூடுகிறது. அப்யங்கா சிகிச்சையாளர், சூடான கற்களால், குறிப்பாக பின், கழுத்து மற்றும் தோள்கள் போன்ற இடங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிகிச்சை பெறுபவர் இளைப்பாறிய மயக்க நிலையையும், குணப்பட்ட உணர்வை யும் பெறுகிறார். மேலும் நரம்பு அமைப்பின்  மீது குணப்படுத்தும் விளைவை அனுபவிக்கிறார். புத்துணர்ச்சி மற்றும் சுத்திகரிக்கப் பட்ட புத்துணர்வையும் பெறுகிறார்.

 

சூடான கல் மசாஜ் அளிக்கும் நன்மைகள்

  1. ரத்த ஓட்டம் அதிகரிப்பு;  நிணநீர் மற்றும் உயிர்ச்சத்து அதிகரிப்பு
  2. நச்சுகள் வெளியேறுகின்றன ; பதற்றம் குறைகிறது
  3. இறுக்கமான தசைகளைத் தளர்த்துகிறது; வெப்பம்  திசுக்களை மென்மைப் படுத்துகிறது
  4. கற்களை சரியாக வைத்துச் சுழற்றும்போது அது உடலின் ​​சக்ரா அமைப்பைச் சமப்படுத்துகிறது. 
  5. முதுகெலும்பில்  கற்கள் இடப்படுகையில் அது  மைய நரம்பு மண்டலத்தை ஆற்றுப்படுத்துகிறது.
  6. உடலில் உள்ள வாத  உறுப்புகளை சமநிலைப்படுத்துகிறது.
  7. உள்ளுறுப்பு உறுப்புகளின் தொனியை மேம்படுத்துகிறது
  8. மெதுவாக தோலைத் தளர்த்துகிறது.
  9. தட்டுதல் மூலம் ஒலி  மற்றும் அதிர்வு  ஒன்றிணைக்கப் பட்டு, இசை சிகிச்சை மூலம்  இணைகிறது.
  10. கற்கள் ஆற்றலின் உயிர் வாழும் நுண்ணுயிர் ஆகையால் என்பதால் மசாஜ்  கூடுதல் ஆற்றல் பெறுகிறது.
  11. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

நினைவில் கொள்ளுங்கள்

சூடான கல் மசாஜ் ஒரு முழுமையான மசாஜ் சிகிச்சை; அது  பல நிலைகளில் ஆற்றுப்படுத்தி, மற்றும் ஒட்டுமொத்த சமநிலையை மீட்டெடுத்து வருகிறது. ஆனால் தனி நபரின் உடல் நிலை, அமைப்பு , பருவகால மாற்றங்கள் மற்றும்  அவரவரது தோஷத்திற்கு மிகவும் பொருத்தமான  எண்ணெய் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அதை தனிப்பயனாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.