ஒவ்வொரு நாளும் காலை 4 .30 மணிக்கு என் தாத்தா, மந்திரங்களை முணுமுணுப்பதின் மூலம், அவருடைய இஷ்ட தெய்வங்களை, பூஜை அறையில் எழுப்பிக்கொண்டிருப்பார். அதை முடித்ததும், அவர் தியானம் செய்து விட்டு, ஒரு நீண்ட நடைக்கு செல்வார். ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு திரும்பியதும், " ஆஹா என்ன ஒரு அழகான காலைப்பொழுது" , என்று வியந்து போற்றுவார்.
ப்ரம்ம என்றால் அறிவு, முஹூர்த்த என்றால் கால அளவு .
ப்ரம்ம முகூர்த்த என்பது, அறிவை உணர சரியான
நேரமாகும்.
என்னுடைய தாத்தாவிற்கு அதிகாலை, குறிப்பாக ப்ரம்மமுகூர்த்த நேரத்தோடு, சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பான நேரத்தோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. எவ்வளவு அதிகம் என்றால், குளிர் கால, குளிர்ச்சியிலும், அவர் தன் அதிகாலை வழக்கத்தை தொடருவார். அவர் தன் சடங்குகள் தாம், அவரை, அவரின் உடல்நிலையை சரிவர வைத்திருப்பதாக நம்பினார், ( அவரின் 80 களில் கூட, அவருடைய நடையும், அமரும் நிலையும், ஒரு சரியான அமைப்பை கொண்டிருந்தது, மேலும் அவருக்கு எந்தவித நோயும் இல்லாதிருந்தது)
பண்டைய கால மருத்துவ நிபுணர்களும் கூட அவரின் கூற்றுக்கு உடன்பட்டனர். அஷ்டாங்க ஹ்ருதயா, எனும் ஒரு ஆயுர்வேத ஆய்வுக் கட்டுரையிலும், ப்ரம்ம முகூர்த்தத்தில் விழிப்பது, ஒருவரின் வாழும் காலத்தை அதிகரித்து, நோயை அண்டவிடாது என்பதை சித்தரிக்கிறது.
ப்ரம்ம முகூர்த்த : "நான்" மறுவரை செய்யப்பட்ட காலம்
நோயில்லாத உடல் மற்றும் கூடுதல் வாழும் காலத்தின் பயன்கள் மனதை தொடும் விஷயம். எப்படி இருந்தாலும், என் தாத்தாவின் அதிகாலைக்குரிய காதலானது, வெகு ஆழமான எதோ ஒன்றின் நடுத்தண்டு போன்றது. அது அவருடைய "நான்" நேரம். அவர் அதை எனக்கு விளக்கி கூறினார். காலையில் இருந்து இரவு வரை நாம் உலகின் தேவைகளுக்கு இடம் கொடுக்கிறோம். அந்த நாள், தொழில், சமுதாயம், மற்றும் குடும்ப பொறுப்புகள் இவைகளை பூர்த்தி செய்வதற்கு செலவிடுகிறோம். இரவிலும் வெகு சிறிது நேரமே ஒருவருக்கு மிஞ்சுகிறது. ஆனால் அந்த நேரத்தில் உனக்கு சக்தி எதுவும் மிஞ்சுவதில்லை. ப்ரம்ம முகூர்த்த நேரம் மட்டுமே, நீ புதியதாயும், விழிப்போடும், உன்னை நீயே உனக்குள் எளிதாக சரியமைத்து கொள்வதற்குமான நேரம். அந்த நேரத்தை உனக்கான சிறப்பான நேரமாக மாற்றிக்கொள் என்றார்.
ப்ரஹ்ம முகூர்த்தத்தில் விழித்து எழுவதின் ஆய்வு பயன்கள்
யோகா மற்றும் அதன் தொடர்புடைய அறிவியலுக்கான ஒரு சர்வதேச ஆய்விதழின் படி, விடியலுக்கு முன், நம் வளிமண்டலத்தில் புத்துயிர் கொண்ட ஆக்சிஜென் நிரம்பியுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஆக்சிஜென் நமது இரத்த புரதத்தில் இலகுவாக கலந்து, கீழ்கண்ட பயன்களை உடைய ஆக்சிபுரதமாக மாறுகிறது.
- நமது நோய்எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.
- நமது ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
- இரத்தத்தின் பி ஹெச் அளவை சமமாக வைக்க உதவுகிறது.
- வலி, புண், பிடிப்பு இவைகளை விடுவிக்கிறது.
- தாதுக்கள், வைட்டமின்களின் கிரகிப்பை
மேம்படுத்துகிறது.
"நான்" நேரத்தில் செய்யவேண்டிய 5 விஷயங்கள்.
நமது முன்னோர்கள், ப்ரஹ்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் சில செயல்கள், ஒருவரை அவருக்குள் திருத்தியமைக்க உதவும் என்பதை கண்டறிந்து வைத்துள்ளனர். இது போன்ற செயல்கள், உங்களுடனான இந்த நேரத்தை, உங்களுக்கும் மற்றும் உலகியல் முன்னிறுத்தலுக்கும் சிறந்ததாகவும், பலனளிக்க கூடியதாயும் செய்ய உதவுகிறது.பழமை வாய்ந்த க்ரந்தங்களான தர்மசாஸ்திரா, இந்துக்களுக்கான தர்ம நீதிசாஸ்திரம், மற்றும் அஷ்டாங்க ஹ்ருதயா பின்வருபவற்றை பரிந்துரைக்கிறது.
1 . தியானம்
உங்களை நீங்கள் சந்தித்துக் கொள்வதற்கு தியானமே சிறந்த வழியாகும். உலகில் மற்ற அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தை விட தியானம் செய்வதற்கான சிறந்த நேரம் வேறு எது இருக்க முடியும்? அந்த நேரத்தில் தான் உங்களுடைய விழிப்புணர்வு அதனுடைய சிறந்த நிலையில் இருக்கும். ப்ரஹ்ம முகூர்த்தத்தில் செய்யக்கூடிய தியானங்களில் மிக சிறந்த தியானம் ஸஹஜ் சமாதி தியானம்.
2 . ஞானத்தை கேளுங்கள் அல்லது படியுங்கள்
அஷ்டாங்க ஹ்ருதயத்தின் படி ப்ரஹ்ம முகூர்த்தம் தான், ஆன்மீக அறிவு மற்றும் விவேகத்தை மனதால் உணர்ந்து கொள்ள மிக சிறந்த நேரம். பழமையான வேத நூல்களை ஆராய்ச்சி செய்யுங்கள், அல்லது ஞானத்தின் எளிய தத்துவங்களை மறுஆய்வு செய்யுங்கள்.தர்மசாஸ்த்திரத்தின் படி ப்ரஹ்ம முஹூர்த்ததில் வேத நூல்களை படிப்பது நம் மனதின் பிரச்சனைகளையும் கூட தீர்க்கும்.
சிறந்த வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்து இரகசியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமா?
முழு பெயர்
மின்னஞ்சல்
நகரம்
தொலைபேசி
நான் இந்த கொள்கையை ஏற்கிறேன்
எனக்கு நலமிக்க வாழ்க்கை முறை வேண்டும்
3 . உங்கள் நாளை திட்டமிடுங்கள்
ப்ரஹ்ம முஹூர்த்தம் உங்களுக்கு அளிக்கும் புத்துணர்ச்சி, மற்றும் விழிப்புணர்வு நிலை அளவு, உங்களின் வாழ்க்கை, தொழில், பொருளாதாரம், மற்றும் அன்றைய நாளின் முக்கிய முடிவுகளை எடுக்க தகுதியான நேரமாகும்.
4 . தன்னாய்வு
உங்களின் முந்தைய நாளை நினைவு கூறுங்கள். எவ்வளவு முறை நீங்கள் எதிர்மறை சிந்தனைகளான, பொறாமை, கோபம், அல்லது பேராசை இவற்றிற்கு நேரம் கொடுத்தீர்கள். இது போன்ற எந்தவொரு நினைவும் உங்களை குற்ற உணர்ச்சிக்கு தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக அதை நினைவு கூறுங்கள். இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்வதால், இது போன்ற உணர்வுகளுக்கான இடம் குறைய ஆரம்பிக்கும், இறுதியாக கெட்ட கர்மாவும் குறையும்.
5 . உங்கள் பெற்றோர், குரு, கடவுளை நினைவு கூறுங்கள்
பெரும்பாலும் நமது வாழ்வின் மிக முக்கிய நபர்களை நினைவு கொள்ள நமக்கு நேரம் இருக்காது. ரிஷி ஷோவ்னக் கூறுவதாவது: இந்த நேரத்தில், உங்களுடைய பெற்றோர், குரு மற்றும் இந்த படைப்பை இயக்குவதாக நீங்கள் நம்பும் அந்த சக்தி, அதை கடவுள் அல்லது உலகிற்கு பொதுவான சக்தி என்று கூட கூறிக் கொள்ளுங்கள், இவர்களுக்கு மனதால் தலை வணங்குங்கள்.
ப்ரஹ்ம முஹூர்த்ததில் செய்ய கூடாத 4 விஷயங்கள்
தர்ம சாஸ்திரமும் சில செய்ய கூடாதவற்றை அறிவுறுத்துகிறது.
- உணவு கொள்ளாதீர்கள்: ப்ரஹ்ம முஹூர்த்ததில் உணவு உட்கொள்வது உடல் நலமின்மையை ஏற்படுத்தும்.
- அமைதியின்மையை தேறும் செயல்களை செய்ய வேண்டாம்:
- மிகவும் கூடுதலாக புத்தியை உபயோகிக்கும் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். அது ஒருவரின் வாழ்நாளை குறைத்து விடும்.
- அனைவரும் ப்ரஹ்ம முஹூர்த்ததில் எழுந்து கொள்ள வேண்டுமா?
அஷ்டாங்க ஹிருதயத்தின் படி, ஆரோக்கியமான மனிதர்கள் மட்டுமே ப்ரஹ்ம முஹூர்த்ததில் எழுந்து கொள்ள வேண்டும்.
இந்த நூல் சில மனிதர்கள் ப்ரஹ்ம முஹூர்த்ததில் எழுந்துக்க கொள்வதை தடுக்கிறது:
- கர்ப்பிணி பெண்கள்
- குழந்தைகள்
- ஆரம்ப காலத்தில் இருந்து இந்த வேளையில் எழுந்து கொள்ளும் பழக்கமில்லாத வயோதிகர்கள்.
- உடல் மற்றும் மனா நலம் இல்லாதவர்கள்.
- முந்தைய நாள் உட்கொண்ட உணவு செரிக்காமல் இருப்பவர்கள்.
(மலம்கழிக்காமல் இருப்பது, உணவு செரிமானமின்மையை குறிக்கும்)
Dr . அஞ்சலி அசோக், ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா, பண்டிட் விஸ்வஜித் , வேத ஆகம சம்ஸ்க்ருத மஹா பாடசாலை, இவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ...
எழுத்தாளர் வந்திதா கோத்தாரி