விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உயர்ந்த சமூக பொறுப்பு இருக்கிறதா? விளையாட்டில் நெறிமுறைகளுக்கான விருதை விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் தலைமைத்துவம் பற்றிய இரண்டாவது உலக உச்ச மாநாடு அளிக்கின்றது

Switzerland
16th September 2016

சூரிய உந்துவிசை, எஃப்சி பாஸல் தலைமைக் குழு, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் விளையாட்டு தூதர் வில்ப்ரெட் லெம்கே ஆகியோருக்கு இவ்விருது சர்வ தேச கால்பந்து கூட்டணிக் குழுவின் தலைமையகமாகிய சூரிச்சில் இன்று அளிக்கப் பட்டது.

சூரிச்: உலக விளையாட்டு, தனது இலக்கிலிருந்து விலகி பெருமளவில் தலைமைத்துவ சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உண்மையான விளையாட்டுத் திறன், மற்றும் விளையாட்டு விதிகளை விளையாட்டுக் களத்திலும் வெளியிலும் முற்றிலும் கடைப்பிடித்தல் ஆகியவை நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தினைப் பெற்றன.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவன ( WADA ) சிறப்புப் புலன்விசாரணையாளர் பேராசிரியர் மெக்லாரென், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் விளையாட்டு தூதர் வில்ப்ரெட் லெம்கே, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவரான ரிஷசார்ட் கிசார்னெகி மற்றும் 53 பிற உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் ஒன்று கூடி, உலக விளையாட்டுக்களில் தற்போதைய நிலை பற்றி விவாதித்து முன்னோக்கிய வழிகளையும் கண்டாய்ந்தனர்.

விளையாட்டு வர்த்தகமயமாக்குவது என்பது விளையாட்டு நிலைநிறுத்தும் மதிப்புக்களை மேலோங்கி அச்சுறுத்துவதாக பங்கேற்பாளர்களும் பேச்சாளர்களும் ஒத்துக் கொண்டனர். விளையாட்டு உயரடுக்கு நிலையில் கற்றுக்குட்டித் தனமாக இல்லாமல் தொழில் ரீதியாகவே காணப் படுகிறது. முதலில் வணிகம், பின்னர் விளையாட்டு என்றே உள்ளது. இலாபங்களை அதிகப் படுத்தும் வணிக மாதிரியைப் போன்று விளையாட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்னும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று கூறினார் ஊக்க மருந்திற் கெதிரான உலக நிறுவனத்தின் சிறப்பு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் மெக் லாரென்.

உச்சி மாநாடு நடைபெறும் இடமாக அமைந்த சர்வ தேச கால்பந்து கூட்டணிக் குழுவின் தலைமையகத்திற்கு வந்திருந்த 35 நாடுகளிலிருந்து 250 சர்வ தேச பிரதிநிதிகளை அதன் தலைவரான கியானி இன்ஃபாண்டினோ வரவேற்றுப் பேசினார். அவர், சர்வ தேச கால்பந்து கூட்டணிக் குழு ஓர் திறந்த நிலை நிறுவனமாகச் செயல்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவித்து, அதன் மூலம் சமூக தாக்கத்தை உருவாக்கும் தனது குறிக்கோளை அடைவதன் தேவையை வலியுறுத்தினார்.

விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் தலைமை மீது இரண்டாவது உலக மாநாடு ஏற்பாடு செய்வதன் மூலம், போட்டி நிர்ணயம், ஊக்கமருந்து மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய சவால்களை கவனத்தில் கொள்வது மட்டுமின்றி விளையாட்டு என்பது நல்ல நேர் மறையான முன்மாதிரியாக கொண்டாடும் விதத்தில் விளங்க வேண்டும் என்பதையும் பிரஸ்ஸல்ஸ் சார்ந்த உலக கருத்துக்களம் கண்டறிந்தது.

வாழ்விலும் விளையாட்டு அரங்கிலும் மனித மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ள ஒரு தனி நபர், ஓர் குழு, மற்றும் ஓர்அமைப்பு இவற்றுக்கு அளிக்கப் படும் அங்கீகாரமே இவ்விளையாட்டு விருது என்று மாநாட்டு நிகழ்வுகள் சுட்டிக் காட்டின.

“ஊழல் மிகுந்த இத்தருணத்தில் விழித்தெழுந்து சரியான தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியம். வாழ்க்கையை விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு இதயங்களையும், மனங்களையும் ஒன்றிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது” என்று கூறினார் வணிக நெறிமுறைகளுக்கான உலகக் கருத்துக்களத்தின் நிறுவனரும், உலகளாவிய மனித நேயத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். அவரே இந்த விருதுக்கான விழாவிற்குத் தலைமை தாங்கினார். அவர் வணிக மற்றும் விளையாட்டு உலகில் நெறிமுறைகள், நல்லாட்சி மற்றும் வெளிப்படையான பல பங்குதாரர் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு வணிக நெறிமுறைகளுக்கான உலகக் கருத்துக் களத்தை நிறுவினார். கொலம்பியா அரசு மற்றும் FARC போராளிகளுக்கிடையே சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பெரும்பங்கு வகித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் 26 செப்டம்பர் 2016 அன்று வரலாற்றுச் சிறப்புடைய அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதைக் காணச் செல்லும் வழியில், ஸ்விட்ஸர்லாந்திற்கு வருகை தந்தார்.

நெஞ்சையள்ளும் விழாவில் , 'சிறந்த அமைப்பு' என்னும் வரிசையில் சூரிய உந்துவிசை வகை வெற்றியாளர்களை பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினார். சூரிய உந்துவிசை வகை வெற்றியாளர்கள் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் ஐந்து நாட்கள் மற்றும் ஐந்து இரவுகள் எரிபொருள் இல்லாமல் நகோயாவிலிருந்து ஹவாய் வரையில், விமானம் மூலம் பறந்து சென்றனர். நீண்ட கால விடாமுயற்சியால் இந்த இலக்கை அடைய , சூரிய உந்துவிசை அணியினர் தீவிரம் காட்டினர். பெரிய நிறுவன இலக்கை அடைவது, ஊக்கம், அழகான பங்கு-மாதிரியாக விளையாட்டுத் திறனை பல்வேறு மதிப்புக்களுடன் முன்னணியில் எப்போதும் எடுத்துக் காட்டுவது ஆகிய செய்திகளை அளித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு துறையின் செயலாளர் மற்றும் சிறப்பு ஆலோசகரான திரு வில்ப்ரெட் லெம்கே அவர்கள், ‘சிறப்பு தனி மனிதர்’ என்னும் பிரிவில் விருதினைப் பெற்றார்.

உலகின் சமாதானத்திற்கு ஒரு ஒருங்கிணைக்கும் கருவியாக விளையாட்டு பயன்பாடு மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாட்டுத் திட்டப்பணிகளை ஊக்குவிப்பதில் அவரது முயற்சி ஆகிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக இவ்விருது வழங்கப் பட்டது. ‘சிறந்த குழுப்பணி’ என்னும் வரிசையில் தலைமைக் குழுவாகிய சுவிஸ் கால்பந்து கிளப் பாசெல் அதன் நிர்வாக மேலாண்மை மற்றும் அதன் மதிப்பு அடிப்படையிலான தலைமைத்துவ பாணி மற்றும் நிலை யான வெற்றி மூலம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆகியவற்றுக்காக இவ்விருதினைப் பெற்றது.

உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாள், வணிக நெறிமுறைகளுக்கான உலகக் கருத்துக்களம் ஒரு பலதுறை கருத்துப் பரிமாறல் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய பாராளுமன்றம், சர்வ தேச கால்பந்து கூட்டணிக் குழு, சர்வதேச வெளிப் படைத் தன்மை நிறுவனம், NOC நார்வே மற்றும் பலர் , முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அமைப்பு பற்றி முதன்மை கவனத்துடன் பங்கேற்றனர்.