தியானம் உங்கள் அறிவுத் திறனை மேம்படுத்துகின்றது (Meditation increases focus in tamil)

உங்கள் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால்,பல தருணங்களில் யாரேனும் ஒருவர், ஒ நீங்கள் மிகுந்த புத்திசாலி" என்றோ " கெட்டிக்கார சிந்தனை" என்றோ அறிவாளி என்றோ உங்களைப் புகழ்ந்திருப்பார்கள்.இந்தக் கணங்கள் பெருமையையும், பிரமிப்பையும் நம்பிக்கையையும் நம்மில் ஏற்படுத்தியவை.இவ்வாறு அடிக்கடி நிகழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா?உங்கள் அன்றாட வேலைகளை மேம்பட்ட சாமர்த்தியம்,செயல்திறன் ஆகியவற்றுடன் செய்தல், நட்சத்திரங்களிடையே நிலவு போன்று இருத்தல் ஆகியவற்றுடன் எவ்வாறு உங்கள் நாளை அணுகுவீர்கள்? நம் அனைவருக்குமே இவ்வாறு இருக்க விருப்பம்தான். இதை அடையும் வழியும் சிறியதுதான். தியானம் என்பதே அது. அன்றாட தியானப் பயிற்சி உங்கள் மனதை அதிக ஆற்றலுடனும் ஆழ்ந்த சிந்தனைத் திறனுடனும் வைக்கின்றது.

#1 – பளிங்கு போன்ற தெளிவான மனம்

நமது மனம் கண்ணாடி போன்றது. கடந்த கால எண்ணங்கள், அனுபவங்கள் ஆகியவற் றையும் எதிர்கால விருப்பங்கள் மற்றும் நிகழ்கால தொடர்புகள் அனைத்தையும் பிரதி பலிக்கின்றது.மனதை பணியில் ஈடுபடுத்தி செயல்விளைவுள்ளதாக வைப்பது கடினமானது ஆகும். தியானம் இதற்கு உதவுகிறது. அது உங்களை மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து இயல்பாக வைக்கிறது. மன சுத்தத்திற்குத் தியானம் உதவுகிறது. கெட்டவைகளை அகற்றி, உங்கள் திறன்களை ஒத்திசைவித்து, உங்களுக்குள் கொண்டு சேர்க்கின்றது.இதன் விளைவாக நீங்கள் பளு குறைந்தவராகவும், அனைத்தையும் பரந்த கண்ணோட்டத்துடன் காண்பவராகவும் ஆகின்றீர்கள்.உங்கள் குணங்களால் நீங்கள் பாதிக்கப் படாத போது, உங்கள் மனதை நிகழ்வுகளுடன் இணைத்து, என்ன தேவையோ அதற்கேற்றாற்போன்று செயல்பட முடிகிறது. உங்கள் எண்ணப் போக்கும் மேம்படுகிறது.

#2 – கவனமும் கவனக் குவிப்பும்

நாம் அனைவரும் ஏதோ ஒரு நேரத்தில்,ஒரு அளவிட முடியாத ஆற்றல் நமது உடலுக்குள்ளேயே இருக்கின்றது என்பதை உணர்ந்திருப்போம்.நமக்குள்ளே இருக்கும் அந்த அமைதியான வலிமை,எதனுடனும் இணைப்படுத்த முடியாத ஒன்று என்பதையும் நாம் அறிவோம். இதை அதிகமாக உணரும்போது அதிக வலிமையுள்ளவர்களாகிறோம்.தியானம் இந்த பலமான இணைப்பை உங்களுடைய மூலத்துடன் கட்டமைக்கின்றது.அது உள்ளத்தில் அமைதி , சாந்தம், இவற்றை நிர்வகிக்க உதவி, அதன் மூலம் மனதை ஒரு தகர்க்க முடியாத சொத்தாக கட்டவிழ்க்கின்றது. ஒழுங்காக தியானம் செய்வது உங்கள் மனத்தைக் கூர்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. போதிய கவனம் இளைப்பாறிய மனம் ஆகியவை நீங்கள் உங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய உதவுகின்றன." வாழ்க்கையின் தரம் உங்கள் மனதின் தரத்தைப் பொறுத்தே இருக்கின்றது" என்கிறார் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள். உலகின் நிகழ்வுகளை நம்மால் கட்டுப் படுத்த முடியாது, ஆனால் நம் மன எண்ணங்களின் தரத்தினை தியானத்தின் மூலம் நாம் கட்டுபடுத்திக் கொள்ள முடியும்.

#3 – உள்ளுணர்வுடன் இணைந்த மனம்:

அமைதியும் நல்லிணக்கமும் இணைந்த தருணங்களில் நம்முள்ளிருந்து ஒரு குரல் தனித்துவமான எண்ணங்கள் கருத்துக்கள் ஆகியவற்றுடன் வெளிவரும். அது நமது கருத்துக்களை எழுப்பி, நம் புரிதலை மலரச் செய்கிறது.அது விரிவானது ஆயினும் இயல்பானது.அந்த எண்ணங்கள் உங்கள் அடி ஆழத்திலிருந்து வருகின்றன.உங்கள் அடிமனமே பேசுவது போன்று உணருகின்றீர்கள்.இந்த உள்ளுணர்வு மனித மனத்திற்கு அளிக்கப் பட்ட ஆசீர்வாதம் ஆகும்.இந்த உள்ளுணர்வு உங்களை சிறப்பாகச் சிந்திப்பவராகவும்,மதி நுட்பம்,மற்றும் கூர்மையுள்ளவராகவும் ஆக்குகின்றது என்று ,ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.காரட்டிற்கு விடமின் எ எப்படியோ அப்படியே தியானம் உள்ளுணர்வுக்கு.அவை உங்கள் திறனை அதிகரித்து, புதுமையாக சிந்திக்கவும், தொடர்புள்ளவராகவும் வைக்கின்றது.

சாரா W. லாசர் என்பவற்றின் தனிப்பட்ட ஆய்வும், அமெரிக்காவிலுள்ள தேசீய உடல்நல நிறுவனத்தில் ஒரு குழுவின் ஆய்வும் தியானம் உங்கள் கவனத்தை அதிகரிக்க வைக்கும் புரணியின் தடிப்பை அதிகப் படுத்துவதாகக் கூறுகின்றன. எய்லீன் லுதேர்ஸ் என்பரின் ஆய்வு, தியானம் மூளைத் திறனை அதிகரித்து சிந்திக்கும் திறனுக்கு வித்திடுகிறது என்று கூறுகின்றது.

 

#4 – படைப்பாற்றல் வெளிப்படுதல்

எப்போது படைப்பாற்றல் திறன் வெளிப்படுகிறது என்று கவனித்திருக்கிறீர்களா? ஏரிக்கரையோரம் நடக்கும் போது, குளியலின்போது, மலையேறும்போது, ஐ போடில் உங்களுக்குப் பிடித்த இசையினை ரசித்து அசைந்து கொண்டிருக்கும்போது,இது நிகழலாம். படைப்பாற்றல் வெளிவருவது, முற்றிலும் கட்டுப்பாடின்றி, இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது, தான் வெளிவருகின்றது. கட்டுபடுத்துதல் களைப்பை ஏற்படுத்தும். மூளை வரைவு ஆய்வின் படி, இளைப்பாறுதலே மனதை புதிப்பிக்கும், என்பது மட்டுமல்ல, உண்மையில் அது நினைவுத் திறனை அதிகப்படுத்தி, அறிவுபூர்வமான புரிதலையும் ஏற்படுத்துகின்றது. என்று கூறுகிறார் ஸ்டான்போர்ட் பலகலைக் கழக அறிவியல் வல்லுனரும் ஆய்வாளருமான எம்மா செப்பலா. அதிகப் படைப்பாற்றல் திறன் உங்களிடம் இருந்தால், பணியிடத்தில்,தனித்துவம் பெற்றவராவீர்கள்.தியானம் உங்களை தளர்த்தி, அதிகப் படைப்பாற்றலுள்ளவராக ஆக்குகின்றது.

#5 – நடு வழி

உங்கள் தெருமுனை யிலுள்ள பிட்சா கடையில் சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ரொட்டி, நன்றாக அரியப் பட்ட காய்கள், சுவையான சீஸ்,இனிப்பான சாஸ்கள், இவற்றுடன் கூடிய பிட்சா அனுபவித்து உண்ணுவது எப்படியோ அப்படியே தான் விரைவாகப் புரியும் தனித்துவமான எண்ணங்களும்.அவை சமசீராகவும் , சேணமிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.அவைகளுக்கே ஒரு தனி தத்துவமான பாணி உள்ளது. தியானம் அத்தகைய தனித்துவமான எண்ணப் பாணியினை அடைய உதவுகிறது.அது உங்கள் இட மற்றும் வலது புற மூளையை சமநிலைப் படுத்தி, சரியான உணர்ச்சிகள், பாரபட்சமின்மை, தர்க்கம், பகுப்பாய்வு ஆகியவற்றைத் தூண்டி, உங்களை நிதானமாகச் சிந்திக்க வைக்கின்றது. " நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தியானப் பயிற்சிக்கு அறிமுகப் படுத்தப் பட்டேன். அதிலிருந்து ஒழுங்காக தியானம் செய்கிறேன். வரைவுக் கலை என் தொழில். என்னுடைய தொழிலில் கடும் போட்டி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுமையாக செய்தால்தான் பிழைக்க முடியும். .என் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சந்திக்க தியானம் என்னுடைய சமநிலையை காத்து வைக்கிறது" என்கிறார் பிரகாஷ்.