சுதர்சன க்ரியா குறிப்பிட்ட இயற்கையான தாள லயத்தில் இணைந்து, உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒத்திசைவு செய்கின்றது. இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி, அழுத்தம், களைப்பு, மற்றும் எதிர்மறை உணர்வுகளான கோபம், ஏமாற்றம், சோர்வு ஆகியவற்றை அகற்றி, உங்களை அமைதியுடன் ஆனால் ஆற்றலுடன், கவனத்துடன் ஆனால் இளைப்பாறி இருக்க வைக்கின்றது.
மூச்சின் மூலம் உணர்ச்சிகளை ஆளுங்கள் :
ஐரோப்பிய ஆய்வாளர்கள் மூச்சு மனதிற்கும் உடலுக்கும் இடையே இணைப்பாக உள்ளது என்று கண்டுபிடித்திருக்கின்றனர். ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட மூச்சு வகை உள்ளது. உதாரணமாக,
Angry: Breath becomes short and quick | Sad or upset: Breath becomes long and deep |
இதன் மாறுபாடும் உண்மையே. அதாவது, ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு அதற்கேற்ற உணர்ச்சியை தூண்டி விடலாம். ஆகவே , நமது உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப் படுவதை விட நாம் குறிப்பிட்ட மூச்சு வகைகளால் உணர்ச்சிகளை மாற்றியமைக்கலாம். சுதர்சன க்ரியாவின் மூலம் மூச்சினைத் திறனுடன் பயன்படுத்தி, விரும்பும் வகையில் உணரலாம். அதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்தும் எதிர்மறை உணர்ச்சிகளான கோபம், பதட்டம், சோர்வு மற்றும் கவலை ஆகியவற்றை வெளியேற்றி, மனதை முழுவதுமாக மகிழ்ச்சியுடனும் தளர்வாகவும், ஆற்றலுடனும் வைக்கலாம்.
சிறந்த உடல்நலம், அதிக ஆக்கத் திறன், நல்ல உணர்ச்சிகள் இவற்றுடன் நன்றாக வாழ்தல்:
சுதர்சனக் க்ரியா நமது அமைப்பில் தினமும் சேரும் அழுத்தத்தினைச் சுத்திகரித்து ஒத்திசைவினை ஏற்படுத்துகின்றது. உண்மையில் சுதர்சன க்ரியா செய்யும் முதல் வகுப்பிலிருந்தே ப்ரோலச்டின் என்னும் நல்ல இயக்கு நீர் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது என்று ஆய்வு கூறுகின்றது. பல்வேறு தரப்பிலுள்ள கோடிக்கணக்கான மக்கள், சுதர்சனக் க்ரியாவின் ஆற்றுப்படுத்தும் ஆற்றலினால் பயன்பெற்றிருக்கின்றனர். கிராமத்தினர், பெருநிறுவன அலுவலர்கள், இல்லத்தரசிகள், பதின் வயதினர், அதிர்ச்சினால் பாதிக்கப் பட்டவர்கள், போர் வீரர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள்,கைதிகள், தொழிலாளிகள்,பல்கலைக் கழக மாணவர்கள், மற்றும் பல தரப்பினர், அனைத்துக் கண்டங்களிலுள்ள நாடுகளிலும் உள்ள மக்கள் அனைவரும் இம்மூச்சுப் பயிற்சியின் பல்வேறு விதமான பயன்களுக்கும் சான்றுரை அளிக்கின்றனர்.
உணர்ச்சிகளின் நன்னிலையானது ஆக்கத் திறன், ஒருமுகப்படுத்துதல்,கற்கும் திறன், மற்றும் வெற்றி இவற்றுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. சுதர்சனக் க்ரியாவின் பயன்கள் எந்த குடும்பம்,தொழில், அல்லது நிறுவனத்திற்கும் வெளிப்படையானதே. மேலும் நல்ல விளைவுகள் காலப்போக்கில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
சுதர்சன்க் க்ரியாவைப் பயிலுங்கள்.
இது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சியாகும்.